கிழக்கு முதல்வரின் அறையில் நடைபெறுவது என்ன? – இரகசியம் வெளியானது! முள்ளிநியூஸ்

கிழக்கு முதல்வரின் அறையில் நடைபெறுவது என்ன? – இரகசியம் வெளியானது!




கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவத்தின் பேச்சு தற்போது கல்வியலாளர்கள் மட்டத்திலும் அரசியல் மட்டத்திலும் பலத்த அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் தங்களது முகநூல்களில் வெளிப்படையாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

நேற்று கிழக்கு மாகாண சபையில் இடம்பெற்ற முதலமைச்சருக்கும் ஆசிரியர்களுக்குமிடையிலான சந்திப்பு நிகழ்வொன்றிலேயே இச்சம்பவம் பகிரங்கமாக இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களது நியமனம் தொடர்பில் முதலமைச்சரை சந்திக்கச் சென்ற போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ தவம் இவ்வாறு பேசியுள்ளார்.

கல்வியலாளர்கள், ஆசிரியர்கள், ரோசமுள்ள பொதுமகன்கள் கொந்தளிக்கும் அளவுக்கு தவம் அப்படி என்னதான் பேசியுள்ளார்?

‘ சீயம்ட ஓபீஸ் வேசைர வெத்திலைப் பெட்டி மாதிரி’ என்று உரத்து கைநீட்டியவாறு பேசியுள்ளார்.

இப்பேச்சுத் தான் தற்போது அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

முதலமைச்சரின் அறையில் தவம், முதலமைச்சர், அன்வர் , வழமையான ஊடகவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் நின்று கொண்டிருந்தனர்.

இவ்வாறான நேரத்திலேயே தவம் உரத்து வேசை என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார்.

வேசை என்று தவம் யாரை சுட்டிக் காட்ட பயன்படுத்தியுள்ளார் என்ற கேள்வியே தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

வேசை என்ற சொல்லைப் பயன்படுத்தி முதலமைச்சரையா? அல்லது அன்வரையா? அல்லது? பெண் ஆசிரியைகளையா? தவம் சுட்டிக்காட்ட முனைந்தார் என பல பக்க கேள்விகள் முன்வைக்கப்படுவதை தவிர்க்க முடியாதுள்ளது.

அன்வரை நோக்கி தவம் பேசியதாக சில இணையங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால் சில ஊடகவியலாளர்கள் அதனை மறுக்கின்றனர். ஏனெனில் முதலமைச்சரின் அந்த அறையினுள் செல்வதற்கு தவத்திற்கு எந்தளவுக்கு உரிமை உள்ளதோ அதில் ஒரு துளியும் குறைவில்லாமல் அன்வருக்கும் சம உரிமை உண்டு.

தவத்தை விட அன்வரே கிழக்கு மாகாண ஆசிரியர்களின் நியமனம் தொடர்பில் அண்மைக்காலமாக பிரேரணைகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார். ஆகவே அன்வர் அந்த அறையினுள் சென்ற போது அன்வருக்கு தவம் பேசினார் என்பது இவ்விடயத்தை மூடிமறைக்க மாகாண சபை உறுப்பினர் அப்பாவி அன்வர் பகடைக் காயாக பயன்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த இடத்தில் அன்வரை தவிர்த்து நோக்க வேண்டிய அடுத்துள்ளவர்கள்; முதலமைச்சரும் ஆசிரியர்களுமே. கிழக்கிற்கு வெளியில் அதிகமான பெண் ஆசிரியைகள் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவ் ஆசிரியர்களின் நியமனம்; தொடர்பில் முதலமைச்சர் அண்மைக்காலமாக பல முயற்சிகளை செய்து வருகின்றார். பிரதமர் மற்றும் பல அதிகாரிகளை நேரடியாக சென்று சந்தித்து இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல எத்தனங்களை மேற்கொண்டு வருகின்றார்.

கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் நியமமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் தொடர்பில் முதலமைச்சர் மேற்கொள்ளும் முயற்சிகள் தற்போது அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்படும் இத்தருணத்தில் முதலமைச்சருக்கு அருகில் நின்று கொண்டு வேசி என்ற சொற்பிரயோகத்தை தவம் பேசியுள்ளதே தற்போது அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் நியமனம் செய்யப்பட்டவர்களில் அதிகமானவர்கள் பெண் ஆசிரியைகள். இவர்கள் இந்த விடயம் தொடர்பில் பல தடவைகள் முதலமைச்சரை சந்தித்து பேசிவருகின்றனர். இவ்வாறான சந்திப்புக்கள் நடைபெறும் இத்தருணத்திலே தவத்தின் பேச்சும் வெளிப்பட்டுள்ளது.

இங்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ தவம் வேசி என்ற செல்லை எதற்காக பயன்படுத்தியுள்ளார்? என்ன காரணத்திற்காக இந்த வார்த்தையை பிரயோகம் செய்தார்? பழமொழிகள் பொருத்தமான விடயங்களை சுட்டிக் காட்டவே பயன்படுத்துப்படுவது வழமை. அவ்வாறு தவமும் வேசி என்ற சொல்லைப் பயன்படுத்த கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட்டின் அறையை பொருத்தமான இடமாகக் கருதியுள்ளாரா?. அதனால் முதலமைச்சரினதும் – பெண் ஆசிரியைகளினதும் பல கட்ட சந்திப்பை வேசிர வெத்திலைப்பெட்டி என்ற தோரணையில் பேசியுள்ளாரா? என பல பக்க நியாயமாக எழும் கேள்விகளை தவிர்க்க முடியாதுள்ளது.

தமிழில் எவ்வளவோ வார்த்தைகள் உள்ளபோது வேசி என்ற மிகவும் கீழ்த் தரமான வார்த்தையைப் பிரயோகிக்கும் அளவுக்கு முதலமைச்சரின் இடம் மாறிவிட்டதா? அல்லது அந்த இடத்தில் அவ்வாறான யாராவது இருந்தார்களா? அல்லது முதலமைச்சரின் அறையில் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை தவம் மறைமுகமாக வெளிப்படுத்த முனைந்துள்ளரா?

கிழக்கு முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டை அதிகமான பெண் ஆசிரியைகள் சூழ்ந்து நிற்கும் போது தவம் இவ்வாறு பேசியமையானது முதலமைச்சரின் சில அந்தரங்க செயற்பாடுகளை மனதில் நிறுத்தி அவைகளை தவம் கோடிட்டு காட்டியுள்ளாரா?

இச் சம்பவம் தொடர்பில் பல இணையங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன. சில இணையத்தளங்களில் இச்சம்பவம் தொடர்பில் செய்திகள் பிரசுரம் செய்யப்பட்டு சில மணி நேரங்களில் அவை நீக்கப்பட்டுமுள்ளன. நீக்கப்பட்ட இரு இணையத்தளங்களானது அக்கiரைப்பற்று மற்றும் அட்டாளைச் சேனை பிரதேசங்களை மையப்படுத்தி இயங்குபவையாக உள்ளன.

ஒரு இணையத்தில் ‘ கிழக்கு முதல்வரின் ஊடகப்பிரிவு திறந்த வீட்டில் நாய் நுழைவதைப் போல் நுழைந்து’ மக்களுக்கு… என்ற தலைப்பும்

மற்றைய இணையத்தில் கிழக்கு முதலமைச்சர் மீது மக்கள் விசனம் என்ற தலைப்பும் இடப்பட்டிருந்தன.

இந்த இரண்டு செய்திகளும் தற்போது இரு இணையங்களிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதுடன் இந்த இரண்டு செய்திகளையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் தனது முகநூலிலும் நேற்றிரவு பகிர்ந்துமுள்ளார்.

நீண்ட ஆய்வாக எடுக்க வேண்டிய இப்பிரச்சினையை மிகவும் சுருக்கமாக இங்கு பதிவதுடன் இந்த இரு செய்திகள் தொடர்பில் பொதுமக்கள் கவலையாகவும் மோசமாகவும் பல கருத்தக்களை எழுதிவருகின்றனர் என்பதை இந்த இடத்தில் சுட்டிக் காட்டுகின்றோம். அதில் பலவாறான விமர்சனைங்களையும் வெளிப்படுத்தியிமுள்ளனர். அவ்வாறு முகநூலில் பதிவிடப்பட்டிருந்த கருத்து ஒன்று மிகவும் வித்தியாசமாகவும் புதிதாகவும் இருந்தது.

‘அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியின் …………… ( பெயர் நீக்கப்பட்டள்ளது) முன்னாள் மனைவிக்கு கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகவுள்ள ஹாபீஸ் நசீர் அகமட் என்ன செய்தார் என்று உங்களுக்கு தெரியுமா? என்ற கருத்தும் அங்கு பதிவிடப்பட்டு சில மணி நேரங்களில் அதுவும் உடன் நீக்கப்பட்டது.

ஆகவே இச்சம்பவங்களை பார்க்கும் போது கிழக்கு முதல்வருக்கு எதிராக ஏதோ காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுவது போல் தோன்றுகின்றது. கிழக்கு மாகாண முதல்வரின் அறைக்குள்ளேயே இருந்து திட்டம் தீட்டப்படுவது போல் தெரிகின்றது. அது என்னவாக இருக்கப் போகின்றது….?
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW