பலஸ்தீன தாயிடமிருந்து… முள்ளிநியூஸ்

பலஸ்தீன தாயிடமிருந்து…



தென்றலையே
அழ வைக்கும்
என் மழழைகளின்
அழு குரல்
உலக வீட்டு உறுப்பினர்கள்
செவிகளில் விழவில்லையா..?

எனது குடியிருப்புக்களில்
அத்துமீறி வந்தமர்ந்த
நரகத்து அரக்கர்களின்
துப்பாக்கிச் சன்னங்கள்
தேசத்து மலர்களைக் குடிக்கிறதே..!

மனிதமுள்ள மானிடமே..!
உலகப் பொலிஸ்காரனின்
மிச்சத்தில் வளர்ந்த
ஓநாய்களின்
மனித வேட்டைகளால் குதறப்படும்
புருசர்களின் உதிரம் – என்னை
செந்நிறமாக்குகிறதே..!

சாத்தான்களின்
சாக்கடைகளில்
சல்லாபம்போடும்
அரபியச் சீமான்களே..!
என் வீரப்புருசர்களின்
கரங்களை வலிமையாக்க
இன்னும் ஏன் தயக்கமோ..?

சோதரா..!
மேற்குலகின்
முதலைக் கண்ணீர் – உங்கள்
வீர உணர்வுகளைத் தடுக்க வேண்டாம்..!
அடக்கி ஒடுக்கும்
இஸ்ரேல் அதர்மவாதிகளை
எதிர்த்துப்போராடும் – என்
வீர மைந்தர்களுக்கு
கைகொடுங்கள்
பறிக்கப்பட்ட எனது
முகவரியை மீட்பதற்காய்..

என்னையும்
எனது இறையில்லமாம்
பைத்துல் முகத்தஸையும்
மீட்டெடுப்பதற்காய்
உயிர்துறக்கும்
புதல்வர்களின் போராட்டம்
வெற்றிகாணும் நாள் விரைவினிலேதான்
அதுவரை – என் விழிகள்
தினமும் சிந்தும் செந்நீர்
இம்மண்ணுக்கும்
மண்ணின் விடுதலை வீரர்;களுக்கும்
உரமாகட்டும்…!!
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW