விசேட செய்திகள்:-யானை ஆதரவாளர்களிடையே மோதல் முள்ளிநியூஸ்

விசேட செய்திகள்:-யானை ஆதரவாளர்களிடையே மோதல்



ஐக்கிய தேசிய கட்சியின் இரு குழுக்களுக்கு இடையில் நேற்று -09- மாலை மோதல் ஏற்பட்டுள்ளது.

கட்சியின் மூத்த உறுப்பினர்களை கௌரவிக்கும் முகமாக ஆனமடுவ பகுதியில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இந்த மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா கலந்துக் கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும்,இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் ஆதரவாளர்களே இந்த மோதலுக்கு காரணம் என நிரோசன் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இந்த சம்பவம் குறித்து தெளிவான எந்த தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW