விசேட செய்திகள்:-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் கொலை, தாயும் மகனும் காயம்

அகுணுகொலபெலெஸ்ஸ பகுதியில் இருவர் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (09) அத்துமீறி அவர்களது வீட்டுக்குள் நுழைந்த சிலர் அங்கிருந்தவர்களைத் தாக்கியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது அக் குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரு மகன்மார்களுமே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இவர்களில் 60 வயதான தந்தை மற்றும் அவரது 25 வயதான மகனும் பலியாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் இதில் படுகாயடைந்த 52 வயதான தாய் மற்றும் 28 வயதான மகனும் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.