மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த தேக்குமரக் கடத்தல் பொலிஸாரால் முறியடிப்பு முள்ளிநியூஸ்

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த தேக்குமரக் கடத்தல் பொலிஸாரால் முறியடிப்பு



மட்டக்களப்பு, குடும்பிமலையை அண்மித்த காட்டுப் பகுதியில் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த தேக்குமரக் குற்றிகள் கடத்தலை பொலிஸார் முறியடித்துள்ளனர்.

இரகசிய தகவலின் பிரகாரம் பொலிஸார் இந்த கடத்தலை முறியடித்துள்ளதுடன், 42 தேக்குமரக் குற்றிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்குமரக் குற்றிகள் விற்பனைக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போதே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேபநபர்களைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை குடும்பிமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW