இந்த ஆட்சியில் இனவாத கருத்துக்களை வெளிப்படையாக கூறி வருபவர்களுக்கு எதிராக நடவடிக்கை இல்லை – மஹிந்த முள்ளிநியூஸ்

இந்த ஆட்சியில் இனவாத கருத்துக்களை வெளிப்படையாக கூறி வருபவர்களுக்கு எதிராக நடவடிக்கை இல்லை – மஹிந்த



என்னுடைய தொலைபேசியையும் ஒட்டுக்கேட்கின்றார்கள், ஆனால் நான் எதற்கும் பயப்படமாட்டேன் சொல்வதை நேராக சொல்பவனே நான் என மஹிந்த ராஜபக்ஸ பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும் இப்போதைய ஆட்சியில் வழக்கு தாக்கல் செய்வது என்பது இலகுவாகி விட்டது அனைவர் மீதும் பொய்யான வழக்குகள் முன்வைக்கப்படுகின்றது.
நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் எந்த வித அக்கறையும் தற்போதைய ஆட்சிக்கு இல்லை. மக்கள் திசை திருப்பப்படுகின்றனர். கூடிய விரைவில் அதற்கான பதில் கிடைக்கும்.
நாட்டை காப்பாற்றிய அனைவருமே தற்போது குற்றவாளிகளாக்கி தண்டிக்க சூழ்ச்சிகள் நடைபெறுகின்றது. ஆனால் இனவாத கருத்துகளை வெளிப்படையாக சிலர் கூறிக்கொண்டு வருகின்றனர் அவர்கள் தொடர்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தினார்.
இன்று கோத்தபாயவுடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்த மஹிந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனைக் கூறினார்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW