உள்ளூராட்சி தேர்தலில் கலப்பு முறைமையை பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடல் இன்று

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது கலப்பு தேர்தல் முறைமையை பயன்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று நடத்தப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளின் நிரந்தர பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்குமிடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.
புதிய தேர்தல் முறை தொடர்பான திருத்த சட்ட மூலம் குறித்தும் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சட்டவல்லுனர்களின் ஆலோசனைக்கு அமைய புதிய தேர்தல் முறை தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.