புத்தளத்தில் காட்டு யானை தாக்கி கர்ப்பிணிப் பெண் காயம் முள்ளிநியூஸ்

புத்தளத்தில் காட்டு யானை தாக்கி கர்ப்பிணிப் பெண் காயம்



புத்தளம் மஹமெத்தேவ கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.

நேற்றிரவு 10 அளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

காயங்களுக்குள்ளான இந்தப் பெண் விகாரைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே தாக்குதலுக்கிலக்காகியுள்ளார்.
சம்பவதத்தில் காயமடைந்த பெண் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தப்போவ வனப்பகுதியிலிருந்து உணவுக்காக வரும் யானைகள் அடிக்கடி கிராமங்களுக்குள் உட்பிரவேசிப்பதாக கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW