இலங்கைத் தமிழ் இளைஞர் பிரான்ஸில் படுகொலை.!

இலங்கையைச் சேர்ந்த இளைஞரொருவர் பிரான்ஸ் நாட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி பிரான்ஸின் ஒபேவில்லியர்ஸ் எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
சம்பவத்தில் 30 வயது மதிக்கக்கூடிய இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இலங்கையைச் சேர்ந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.