நாளை முதல் மின்சார விநியோகம் சீரடையும்? முள்ளிநியூஸ்

நாளை முதல் மின்சார விநியோகம் சீரடையும்?



நாளை முதல் மின்சார விநியோகம் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறதென மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின்சார நிலையத்தின் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட பாதிப்பினால் தற்போது நாளாந்தம் ஒன்றரை மணி நேர மின்சார விநியோகத் தடை ஏற்படுத்தப்படுகிறது.

பாதிப்பு ஏற்பட்டிருந்த மின்பிறப்பாக்கி நாளை முதல் இயங்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் ஊடாக தேசிய மின்னோட்டத்துக்கு 300 மெகாவோட் மின்சாரம் இணைக்கப்படும்.

இந்த நிலையில், நாளையில் இருந்து மின்சார விநியோகம் சீராக இடம்பெறும் என்று எதிர்பார்ப்பதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW