நானுஓயா விபத்தில் மூவர் உயிரிழப்பு ஆறுபேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் முள்ளிநியூஸ்

நானுஓயா விபத்தில் மூவர் உயிரிழப்பு ஆறுபேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்


நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நானுஓயா கிளாரன்டன் தோட்ட பகுதியில் டிப்பர் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

பலத்த காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இன்று (13) அதிகாலை வேளையில் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறுபேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW