சுன்னாகம் நீர் மாசு: மத்திய சுற்றாடல் மற்றும் குடியிருப்பு சுகாதார பணிப்பாளருக்கு பகிரங்க பிடியாணை முள்ளிநியூஸ்

சுன்னாகம் நீர் மாசு: மத்திய சுற்றாடல் மற்றும் குடியிருப்பு சுகாதார பணிப்பாளருக்கு பகிரங்க பிடியாணை



யாழ். சுன்னாகம் பகுதியில் கிணற்று நீரில் எண்ணெய் கலந்திருப்பதாக பொதுமக்கள் தாக்கல் செய்திருந்த வழக்கில், பிரதிவாதிகளில் ஒருவரான மத்திய சுற்றாடல் மற்றும் குடியிருப்பு சுகாதார பணிப்பாளருக்கு மல்லாகம் நீதிமன்றத்தினால் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் கிணறுகளில் எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பான வழக்கு இன்று மல்லாகம் நீதவான் ஏ. ஜூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த தவணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால், மத்திய சுற்றாடல் குடியிருப்பு சுகாதார பணிப்பாளருக்கு எதிராக இன்று பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் வலிகாமம் தெற்கு பிரதேச சபைத் தவிசாளர், யாழ்ப்பாணம் நீர் வளச்சபையின் தலைவர், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வட மாகாணப் பணிப்பாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பணிமனை அதிகாரி, நீர் வழங்கல் அதிகார சபை ஆகிய தரப்பினர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் கட்டளையிட்டுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW