கிளிநொச்சியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நபர் தனது வீட்டிலிருந்து இரவு 11 மணியளவில் வெளியேறிச் சென்றிருந்த நிலையில், இன்று (01) அதிகாலை ரயில் பாதைக்கருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர் தனது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றருக்கு அப்பாலுள்ள ரயில் பாதையில் இரவு நேரங்களில் அடிக்கடி உறங்கும் பழக்கத்தைக் கொண்டிருந்ததாக அயலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ரயிலில் மோதுண்டு உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.