பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவரவுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியூஸிலாந்தில் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து பிரதமருடன் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டு ஊடக சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதுகுறித்து கூறியுள்ளார்.
இலங்கை நேரப்படி இன்று (01) அதிகாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ ஆகியோரிடையே ஒக்லேண்டில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.