இலங்கைக்கு கொண்டு வர முற்பட்ட ஒருதொகை போதை பொருட்கள் இராமேஸ்வரம் பொலிஸாரால் பறிமுதல் முள்ளிநியூஸ்

இலங்கைக்கு கொண்டு வர முற்பட்ட ஒருதொகை போதை பொருட்கள் இராமேஸ்வரம் பொலிஸாரால் பறிமுதல்



இலங்கைக்கு கொண்டு வர முற்பட்ட ஒருதொகை போதை பொருட்கள் இராமேஸ்வரம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக எமது இந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இராமநாதபுரத்திலிருந்து 5 பெட்டிகளில் அடைக்கப்பட்ட போதைப் பொருட்கள் வேதளை கடற்பகுதிக்கு கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2 இலட்சம் போதை மாத்தரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சுமார் ஒருகோடி ரூபா மதிக்கத்தக்க மாத்திரைகளே இலங்கைக்கு கொண்டு வரப்படவிருந்ததாக செய்தியாளர் குறிப்பிட்டார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW