கிழக்கு – வடக்கு இணைப்பை எதிர்க்கிறீர்களா? இதோ அனுபவியுங்கள் புதிய பிரச்சினைகளை! முள்ளிநியூஸ்

கிழக்கு – வடக்கு இணைப்பை எதிர்க்கிறீர்களா? இதோ அனுபவியுங்கள் புதிய பிரச்சினைகளை!



இலங்கையில் தீவிர இந்துத்வா சக்தியான சிவசேனையின் ஊடுருவல் குறித்து நாம் எந்தளவு தூரம் விழிப்பாகவும் அவதானத்துடனும் இருக்கிறோம்?

இங்கு மிகவும் கவனமாக முன்னெடுக்கப்பட்டு வரும், புவியரசியல் காய்நர்த்தல்கள் (Geopolitical moves) குறித்து நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

இவை எந்த சூழமைவில் நடைபெறுகின்றன என்பதை மிக உன்னிப்பாக அதானியுங்கள்.

இப்போது புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வரப் போவதாக அரசாங்கம் கூறி வருகிறது. யாருக்கும் தெரியாமல் திடீரென்று பாராளுமன்றத்தில் அதைத் தாக்கல் செய்வார்கள். பொறுத்திருந்து பாருங்கள்.

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராக வருகீறீர்களா, இதோ பிடியுங்கள் நாங்கள் தருகிற பிரச்சினைகள் என்ற பரிசுகளை என்பதுதான் அவர்களது அணுகுமுறை.
புதிய பிரச்சினைகளுக்குள் நம்மை சிக்க வைக்கப் பார்க்கின்றனர். இதுதான் இந்த நகர்வுகளின் பின்னேயுள்ள அரசியல்.

கிழக்கு – வடக்கு இணைப்பினால் நன்மையடையப் போகிற பிரந்திய, சர்வதேச சக்திகள் யார் என்பது பகிரங்க வெளிச்சம்.
யார் யாருடையவோ இரகசிய நிகழ்ச்சி நிரலுக்காக இந்த நாட்டு மக்கள் அநியாயமாகப் பலிக்கடாக்களாக்கப்படப் போகிறார்கள்.

போர் ஓய்ந்து நாம் இன்னும் மூச்சுக் கூட விடவில்லை. அதற்குள்ளால் ஆயிரம் சதிவலைகள்.
நமது புதிய தலைமுறையினரின் எதிர்காலம் குறித்து மிகவும் அஞ்சுகிறேன்.

முடிந்தால் இந்த செய்தியைப் பகிருங்கள் தொழர்களே, தோழியரே!
பலரும் சிந்தித்து செயற்பட அது உதவும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW