எமது வாழ்வில் மரணம் ஓர் சவால்
உலகில் பிறக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் ஏதோ ஒரு நாளில் மரணத்தின் மூலம் மறைந்தே தீரும் என்பதே இறைவனின் நியதியாகும். இந்த நியதியிலிருந்து விதி விலக்குப் பெற எந்த ஆத்மாவுக்கும் விதிவிலக்குக் கிடையாது என்பதனை பின்வரும் இறைவனின் அல் குர்ஆன் வசனம் பறைசாட்டுகிறது.’இவ் உலகில் பிறந்த அனைத்து ஆத்மாக்களும் மரணித்தே தீரும்’
உண்மையில் இந்த அல் குர்ஆன் வசனம் எதிர்பார்ப்பதைப் போல் நாம் நாளாந்தம் பல உயிர் இழப்புக்களை குடும்பங்களிலும், பிற அயல் நாட்டுச் செய்தி ஊடகங்களின் ஊடாகவும் பார்த்தும் அறிந்தும் வருகின்றோம் அவ்வாறான மரணங்கள் திடீர் மரணம், விபத்தில் மரணம், யுத்தத்தில் மரணம், தற்கொலையில் மரணம் நோயினால் மரணம் என்றெல்லாம் மரணங்கள் பல விதத்தில் நிகழ்வதை எம்மால் உணரமுடிகின்றது.
இன்னும் உங்களில் யாராவது மரணித்தால் ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலஹி ராஜிஊன்’ எனக் கூறுங்கள் என்று இறைவன் அவனது அடியார்களைப் பார்த்துக் கட்டளை பிறப்பிக்கின்றான். இந்த வார்த்தை அரபு மொழியாக இருப்பதனால் இது வேண்டிநிற்கும் கருத்து ஆழத்தைப் பார்ப்போம் அதாவது நாங்கள் அல்லாஹூக்குச் சொந்தமானவர்கள் மேலும் நாம் அனைவரும் அவனிடமே திரும்பிச்
செல்லவுள்ளோம் என்பதாகும்.
ஆகையால் நாம் ஒவ்வொருவரும் இவ் வசனத்தை எமது உள்ளத்தில் பதிய வைத்து நாமும் ஏதோ ஓர் நாளில் ஏதோ ஓர் இடத்தில் எமது பட்டம், பதவி, சொத்து, செல்வங்கள் மற்றும் பிள்ளைச் செல்வங்கள் அனைத்தையும் இழந்து இவ் உலகை விட்டும் முற்றுப் பெறுவோம் என்பதனை நினைவில் வைத்து எங்களது வாழ்வின் அனைத்து நல்ல சந்தர்ப்பங்களையும் எம்மைப் படைத்த இறைவன் எம்மிடம்; எதிர்பார்க்கும் நல்ல காரியங்களில் அதிக ஈடுபாடுகாட்டி மக்களுக்கு மத்தியில் மக்களை மதித்து மனிதாபிமானத்துடன் வாழ்ந்து ஈருலக வாழ்விலும் வெற்றி பெற முயற்சிப்போமாக.