நல்லாட்சிக்கு மற்றுமொரு தலையிடி: ஊனமுற்ற படைவீரர்கள் வீதிக்கு இறங்குகின்றனர் முள்ளிநியூஸ்

நல்லாட்சிக்கு மற்றுமொரு தலையிடி: ஊனமுற்ற படைவீரர்கள் வீதிக்கு இறங்குகின்றனர்



ஊனமுற்ற படைவீரர்கள் கொழும்பில் இன்று போராட்டமொன்றை நடத்த உள்ளனர்.

உத்தேச ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் படைவீரர்களின் கோரிக்கையை தற்போதைய அரசாங்கம் இதுவைரயில் நிறைவேற்றவில்லை என படைவீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய முன்னணியின் தலைவர் யு.பி.வசந்த தெரிவித்துள்ளார்.

பத்து வருடங்களுக்கும் குறைந்த சேவைக் காலத்தை உடைய ஊனமுற்ற படைவீரர்களுக்கான ஓய்வூதியம் வெறும் சுற்று நிருபத்திற்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டுமென கடந்த ஜூலை மாதம் 30ம் திகதி போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மூன்று மாதங்களில் தீர்வு வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

எனினும் இதுவரையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் வசந்த கோரிக்கை விடுத்துள்ளார். செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW