கொழும்பிலிருந்து குறுந்தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ் சேவையாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். முள்ளிநியூஸ்

கொழும்பிலிருந்து குறுந்தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ் சேவையாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


கிரில்லவல - கோட்டை, கடவத்தை - கோட்டை, கம்பஹா - கொழும்பு மற்றும் நிட்டம்பு - கொழும்பு ஆகிய தனியார் பேருந்துகள் சேவையாளர்களே இவ்வாறு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (27) நெடுந்தூர சேவை மற்றும் குறுந்தூர சேவை பஸ் சாரதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் குறுந்தூரப் பயண சேவை சாரதிகள் சிலரை பொலிஸார் கைது செய்தமைக்கு எதிர்ப்புப் தெரிவித்து குறித்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW