யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு நீதி கோரி வட மாகாணத்தில் பூரண ஹர்த்தால் முள்ளிநியூஸ்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு நீதி கோரி வட மாகாணத்தில் பூரண ஹர்த்தால்




யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணத்திற்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தி வடக்கு மாகாணம் முழுவதும் ,இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி , மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த மாவட்டங்களில் தூர இடங்களுக்கான பஸ் சேவைகள் மட்டும் முன்னெடுக்கப்படுவதுடன் பாடசாலைகள் , கடைகள் என்பன முற்றாக இயங்கவில்லை என எமது செய்தியாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW