இலங்கையில் சிறந்தது பரீட்சை திணைக்களம், வருவாய் கொட்டுவது சுங்கத் திணைக்களம்

இதற்கென 38 அரசாங்கத் திணைக்களங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டுக்கு அதிகளவிலான வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு திணைக்களமாக, இலங்கை சுங்கத் திணைக்களம் விளங்குகின்றது.
கலால் திணைக்களம் உட்பட பிரதான பல திணைக்களங்களை விட பரீட்சைகள் திணைக்களமே சிறப்பான சேவையொன்றினை நாட்டுக்கு வழங்கியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்காய்வாளர் திணைக்களத்தின் கடந்த மூன்று மாத கால அறிக்கைகளின் படியே இவ்வறிக்கையானது தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.