முள்ளிப்பொத்தானை சிராஜ் கனிஷ்ட பாடசாலை” இடமாற்றத்திற்கான புதிய காணி
முள்ளிப்பொத்தானை சிராஜ் கனிஷ்ட பாடசாலையானது அமைந்திருக்கும் பகுதியானது மலைப் பகுதியில் அமைந்திருப்பதால் மாணவர்கள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாக்கப்படுவதுடன் கல்வி கற்பதனை மேற்கொண்டு செல்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியவர்களாக காணப்பட்டனர்.
இந்த பிரச்சனை சமப்ந்தமாக முள்ளிப்பொத்தானை பிரதேச மக்களும், மாணவர்களும், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் புல்மோட்டை அன்வரிடம் தொடர்ந்தேர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதனடிப்படையில்
முள்ளிப்பொத்தானை சிராஜ் கனிஷ்ட பாடசாலையினை புதிய இடத்திற்கு மாற்றுவதற்காக சிராஜ் நகர் பொது மைதானத்திற்கு அருகாமையிலுள்ல ஜபருல்லாஹ் கான் என்பருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் விஸ்தீரணமுள்ள காணித்துண்டு ஒன்றை குறித்த பாடசாலையின் அபிவிருத்தி சங்கம் தம்பலகாமம் முள்ளிபொத்தானை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் மத்திய குழு தலைவர் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் வேண்டுகோளுக்கமைவாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர் .எம் .அன்வர் குறித்த நபருக்கு சொந்தமான காணியினை பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் 17.10.2016 ம் திகதி திங்கட் கிழமை மாலை 07.30 மணியளவில் அவரது இல்லத்தில் வைத்து காணிக்கான முற்கொடுப்பனவு வழங்கி வைத்ததுடன் குறித்த காணியானது பாடசலைக்கு சொந்தமானது என்பதனை உறுதிப்படுத்தி வைத்தார்.
குறித்த நிகழ்வின்போது பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் தம்பலகாமம் பிரதேசத்திற்கான ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் மத்திய கிளை உறுப்பினர்களை உட்பட கட்சிப் போராளிகள் பலரும் கலந்துகொண்டதோடு எவராலும் தீர்க்கப்படாமல் இதுவரை காலமும் மாணவர்கள் எதிர் நோக்கிய அசெளகரியங்களுக்கு காரணமாக இருந்த குறித்த பிரச்சனைக்கு தீர்வினை பெற்றுத்தந்த புல்மோட்டை அன்வருக்கு பிரதேச மக்கள் தங்களது நன்றியினையும் தெரிவித்து கொண்டனர்.
எப்.முபாரக்