பாடசாலையும் தாடியும்…!!! முள்ளிநியூஸ்

பாடசாலையும் தாடியும்…!!!



ஒரு பாடசாலை பல பண்பாட்டுச் சூழலைக் கொண்டது. பல வகையான மாணவர்களின் செயற்பாடுகளை அங்கு வகைப்படுத்த முடியும். ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு கோலங்களைக் கொண்டிருப்பான். பொதுவான ஒரு சட்ட அமைப்பின் மூலமாகவே மாணவர்களை கட்டுப்படுத்த முடிகிறது என்பதினை ஆசிரியர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். எப்பொழுது பொதுவான சட்டங்கள் வலுவிழந்து போகின்றனவோ அங்கு மாணவர்களின் ஒழுக்க நெறி மீது பாரிய இடி விழுவதினை மறுக்க முடியாது…

பாடசாலை மாணவர்கள் தாடி வைக்க வேண்டுமா? எனும் கேள்விக்கு பாடசாலை சொல்கின்ற பதில் முடியாது என்பதுதான். இது மிகவும் ஒரு நியாயமான பதிலாகவே பார்க்கிறேன். முதலில் தாடி என்பது எவ்வகை கலாச்சார அமைப்பினை எமது சமூகத்தின் முன் வைத்திருக்கிறது எனும் கேள்வியை ஒவ்வொரு பெற்றோரும் கேட்க வேண்டும். மார்க்கம் எனும் தூணினை தாடி எனும் ஒரு பொருளுக்குல் ஒட்டு மொத்தமாய் அமிழ்த்துவது பெரும் அபத்தமாகும்..

இன்றைய நடிகர்களின் பிரதான வடிவமைப்பாக மாறியிருக்கும் தாடி அழகியல் என்பன ஒவ்வொரு மாணவனின் முகத்திலும் வரையப்பட்டால் வகுப்பறைகளின் நிலவரத்தினை நான் சொல்ல வேண்டுமா என்ன? பாடத்தில் இருக்கின்ற முழுக் கவனமும் தாடிகளில் விழுந்து இறுதியில் அது மயிர் பட்டறையாகவே மாறிவிடும்…

அடுத்து ஆசிரியர்கள் மீது அபாண்டம் சுமத்துகின்ற மார்க்கத்தின் காப்பனர்கள் தங்களின் மகனின் தாடியில் மட்டும் இஸ்லாமிய அமைப்பினை நிலைநாட்ட முயற்சிப்பதுதான் பெறும் வேடிக்கை. அப்பாடசாலைகளில் பெரும்பாண்மையாக இருக்கின்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் கோலங்கள் பற்றி இவர்களுக்கு அக்கறை கிடையாது….

இஸ்லாமிய கொள்கையினை தாடியில் மட்டும் நிறைவேற்ற துடிக்கும் அடிப்படை வாதிகளின் மார்க்கப் பற்றினை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் ஆயிரக்கணக்கான கோலங்களைக் கொண்ட மாணவர்களின் சிகை வர்ணங்களைப் பற்றியும், அதன் ஒழுக்கப் பிறழ்வுகள் பற்றியும் யாரரிவார்?

தாடியே முளைக்காத மாணவப் பருவத்தில், முகத்தில் இருக்கின்ற நாலு மயிரை வைத்து போராடுகின்ற நாம் இஸ்லாத்தின் முதன்மையாக இருக்கின்ற கல்வி பற்றியும், பாடசாலை விதி முறைக்கு கட்டுப்படுகின்ற ஒழுக்கம் பற்றியும் மறந்து விடுகிறோம். இதுதான் எமது மார்க்கப் பற்று….
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW