பொல்கஹவெலயில் காரொன்று ரயிலுடன் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
பொல்கஹவெல, புஹுரிய சந்திக்கருகில் ரயில்வே கடவையில் காரொன்று ரயிலுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று அதிகாலை 4.45 அளவில் இடம்பெற்றுள்ளது.
பொல்கஹவெல, புலுகொல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இந்த விபத்து காரணமாக கணேவத்தயில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயிலின் போக்குவரத்திற்கு, சுமார் அரை மணித்தியாலம் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க குறிப்பிட்டார்.