துடுவேகொடை வாவி பெருக்கெடுத்தமையால் 20 வீடுகள் நீரில் மூழ்கின
துடுவேகொடை வாவிக்கு அருகில் காணப்படும் 20 வீடுகளே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சிறிய அளவில் மழை பெய்தால் கூட இந்த வாவி பெருக்கெடுப்பதன் காரணமாக தங்களின் வீடுகள் நீரில் மூழ்கும் நிலை ஏற்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களே இந்த பகுதியில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.