வயதானாலும் தெம்போடுதான் இருக்கிறேன்: சந்திரிக்கா சூளுரை! முள்ளிநியூஸ்

வயதானாலும் தெம்போடுதான் இருக்கிறேன்: சந்திரிக்கா சூளுரை!



இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கும் வயது கூடிய தலைவர் நானாக இருக்க முடியும் ஆனாலும் இன்னும் தெம்பிழக்கவில்லை, நம்பிக்கையோடு முன்னேறிச் செல்வோம் என தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க.

கட்சியை விட்டு எத்தனையோ போர் கடந்த காலத்தில் போயிருக்கிறார்கள். அவ்வளவு ஏன் அதிகாரமிக்கவர்களை தோற்கடிக்க முடியாது என்றே எல்லோரும் சொன்னார்கள். ஆனால் அதையும் தாண்டி எம்மால் ஜனாதிபதி தேர்தலையும் அதற்கடுத்த தேர்தலையும் கூட வெல்ல முடிந்தது.

எனவே, யார் இருக்கிறார்கள் இல்லையென்பதைப் பற்றி சிந்தித்துக்கொண்டிராது வெற்றியை நோக்கி முன்னேறிச் செல்வோம் என கம்பஹவில் சு.க ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW