வில்பத்து; NGOக்களுக்காக பேசப்படும் விவகாரமா?
வில்பத்து பிரதேசத்தில் வன அழிப்பு இடம்பெறுவதாகவும் அதன் பின்னணியில் அமைச்சர் ரிசாத் பதியுதீனே இருப்பதாகவும் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான கூட்டணி எனும் அமைப்பு நேற்று மீண்டும் செய்தியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து குற்றஞ்சுமத்தியிருந்தது.
இதன் போது, பிரபாகரன் உயிரோடு இருந்த போது, இன்றைய சூழலியலாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களால் அங்கு போக முடிந்ததா என குறித்த குழுவினரை நோக்கி வினாவெழுப்பிய ஊடகவியலாளர் அஷ்ரப் ஏ சமத், அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்ள உருவாக்கப்பட்டிருக்கும் என்.ஜி.ஓக்களுக்காகவே இவ்வாறு பேசப்படுகிறதா எனவும் குறித்த குழுவினரிடம் வினவியிருந்தார்.
நாமல் ராஜபக்சவினால் மேற்கொள்ளப்பட்ட வன அழிப்பு தொடர்பில் பேச மறுக்கும் குறித்த குழுவினர் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நிகழ்ச்சி நிரலுக்காகவே இவ்வாறு பிரச்சாரம் நடாத்தப்படுகிறது எனவும் மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அவை தொட்ர்பில் அடுத்த மாதம் செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தத் தாம் திட்டமிட்டுள்ளதாக குறித்த அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வவுனியாவில் 5000 ஏக்கர் இராணுவத்தினரால் அபகரிக்கப்படவிருந்த நேரத்தில் தாமே அதனைத் தடுத்ததாகவும் குறித்த குழுவினர் தெரிவித்துள்ளனர். இக்குழவில் ஒட்டாரா ஓடேல் நிறுவனத்தின் ஒட்டார குணவா்தன, காலாநிதி எரிக் விக்கிரம, கலாநிதி செவாட் ஜெயா உட்பட்டோர் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.