கந்தளாய் 93ம் கட்டையில் வேன் விபத்தில் 07 வயது சிறுவன் முனீர் அஸ்ரி வபாத் : 07 பேர் படுகாயம் முள்ளிநியூஸ்

கந்தளாய் 93ம் கட்டையில் வேன் விபத்தில் 07 வயது சிறுவன் முனீர் அஸ்ரி வபாத் : 07 பேர் படுகாயம்



கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கி வந்து கொண்டிருந்த வேன் மின் கம்பத்துடன் மோதி இன்று அதிகாலை (19)3.30மணியளவில் விபத்துக்குள்ளானதில் 07 வயது
சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் 07 பேர் காயமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த 250-3297 எனும் இலக்கமுடைய வேன் கொழும்பிலிருந்து வந்து கொண்டிருந்த போது 93ம் கட்டைப்பகுதியில் மின் கம்பத்துடன் மோதியுள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா,சின்னக்கிண்ணியா பகுதியைச்சேரந்த முனீர் அஸ்ரி அஹமட் (07வயது) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாகவும் காயமடைந்த 07 பேரும் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.
சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக விசாரணைகளை கந்தளாய் தலைமைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


(இஹ்ஸானா- பரீத்)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW