மூதூர் பிரதேச செயலகத்தில் இரத்ததானம் முள்ளிநியூஸ்

மூதூர் பிரதேச செயலகத்தில் இரத்ததானம்


இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை கிளை ஏற்பாட்டில், மூதூர் பிரதே செயலக நிறைவேற்று அதிகாரி டாக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் இரத்ததான முகாம் இடம்பெற்றது.

இதில் திருகோணமலை செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள்இவள இணைப்பதிகாரி, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேச செயலாளர் ஏ.எஸ்.யூசுப் அனைவரின் பங்கேற்புடன் 50 க்கும் மேற்பட்டோர் இரத்தம் வழங்கி பங்களிப்புச் செய்ததுடன் இரத்ததான முகாம் வெற்றிகரமாக இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW