கபீர் ஹாஷிமுக்கு எதிராக கூ.எ CIDயில் முறைப்பாடு
ஸ்ரீலங்கன் விமான சேவையின் எயார்பஸ் விமானக் கொள்வனவு விவகாரத்தை மீளாய்வுக்குட்படுத்தி இரத்துச் செய்த நடவடிக்கையின் பின்னணியில் அரசுக்கு ரூ. 150 பில்லியன் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாஷிமுக்கு எதிராக குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறையிட்டுள்ளது கூட்டு எதிர்க்கட்சி.
அரசாங்கத்துக்கு எதிராக ஆறாவது தடவையாக சி.ஐ.டியில் முறையிட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சி, அமைச்சர் கபீர் ஹாஷிம் அமைச்சரவை அனுமதி பெறாமல் தன்னிச்சையாக செயற்பட்டதன் மூலம் இவ்விழப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.