புல்மோட்டை அரிசிமலையில் இரு முஸ்லிம்களின் வீடுகள் படையினரால் விடுவிப்பு
புல்மோட்டை அரிசிமலைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்ட சகோதரர் ஜவ்பார் மற்றும் முத்தலிப் என்பவரின் இரு வீடுகளையும் விடுவிப்பதாக பாதுகாப்பு அமைச்சில் இருந்து 20.10.2016 ம் திகதி தனக்கு தொலைபேசியினூடாக அறிவித்தல் கிடைக்கபெற்றதாக குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும் குறித்த புல்மோட்டை கடற்படை கட்டளையிடும் அதிகாரிக்கு உரிய கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 24.10.2016(திங்கள்) உத்தியோகபூர்வமாக உரியவர்களிடம் கையளிப்பதாகவும் பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.
புல்மோட்டை அரிசிமலைப் பிரதேசத்தில் கடந்த 2004ம் ஆண்டு நிஹார்ப் நிறுவனத்தால் சுனாமியால் பாதிக்கட்ட 03 பயனாளிகளுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட வீட்டில் காலித் என்பரின் வீடு கடந்த பெப்ரவரி மாதமளவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரின் முயற்ச்சியினால் பெற்றுக்கொடுக்கப்பட்டது.