இந்தியாவில் இனி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது-மோடியின் அறிவிப்பால் இந்தியா முழுவதும் பதட்டம்: மக்கள் செய்வது அறியாது திண்டாட்டம்
நேற்று முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று இந்திய பிரதமர் நரோந்திர மோதி அறிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று மோடி அறிவித்தார் மக்கள் பெரும் பதட்டமாகி விட்டனர். கையில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் அலைபாய்ந்தனர்.
கள்ள நோட்டுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கையாக நேற்று நள்ளிரவு முதல் ரூ. 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மோடி அதிரடியாக அறிவித்தார். இது நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது.
மோடியின் அறிவிப்பு சாதாரண மக்களுக்கு இது பெரும் ஷாக்காக அமைந்து விட்டது.
மொத்தக் கடைகள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்ற மக்கள் சில்லறைகளை மாற்றுவதைப் பார்க்க முடிந்தது. திடீரென மக்கள் 500, 1000 ரூபாய் நோட்டுக்களுடன் வந்ததால் கடைக்காரர்கள் குழம்பிப் போய் விட்டனர். விஷயம் தெரிந்ததும் அவர்களும் அதிரச்சி அடைந்தனர்.
மக்கள் குழப்பம் இன்று ஒவ்வொருவரிடமும் ரூ. 500, 1000 கரன்சி நோட்டுக்கள் இருப்பது சர்வ சாதாரணம். இதனால் மோடியின் அறிவிப்பால் கையில் இருந்த பணத்தை என்ன செய்வது என்று குழப்பத்தில் மக்கள் ஆழ்ந்து போயினர்.
பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல இடங்களிலும் மக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள அலை பாய்ந்தனர். இப்படி இரவு நேரத்தில் நம்மைப் புலம்ப வைத்து விட்டாரே மோடி என்று மக்கள் எரிச்சலடைந்ததையும் காண முடிந்தது.
நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தவறுகளை களைய வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோதி கறுப்பு பணத்தை ஒழிக்க தனது அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இன்று மற்றும் நாளை நாள் ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் நாட்டில் பல இடங்களில் இயங்காது என்றும் பிரதமர் மோதி குறிப்பிட்டார். கையிருப்பில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் அதனை டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் 11 ஆம் தேதி வரை பெட்ரோல் பங்குகளில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
நேற்றிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து, சென்னை நகரத்தில் பல்வேறு இடங்களில் ஏ டி எம் மையங்களில் பணத்தை எடுக்க மக்கள் குவிந்துள்ளனர். (bbc)