புதிய அரசியல் அமைப்பு மக்களுடையதாக இருக்க வேண்டும்: பிரதமர் முள்ளிநியூஸ்

புதிய அரசியல் அமைப்பு மக்களுடையதாக இருக்க வேண்டும்: பிரதமர்



புதிய அரசியலமைப்பு மக்களுடையதாக இருக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தினால் உருவாக்கப்படும் அரசியல் அமைப்பு மக்களினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகவே இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு அன்றி அது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதோ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினதோ அல்லது நாடாளுமன்றினதோவாக இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பினை சரியான முறையில் உருவாக்குவதற்கு மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள சிவில் அமைப்புக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற மாதுலுவே சோபித தேரரனின் நினைவு நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW