திருகோணமலையில் கைகுண்டொன்றுடன் ஒருவர் கைது முள்ளிநியூஸ்

திருகோணமலையில் கைகுண்டொன்றுடன் ஒருவர் கைது




திருகோணமலை இலிங்க நகர் பகுதியில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரை கைது செய்து விசாரணை செய்த வேளை கைக்குண்டொன்று நேற்றிரவு (05) 11 மணியளவில் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-இலிங்கநகர் பகுதியைச்சேர்ந்த ஜெயச்சந்திரன் கிஷாந்தன் (28 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நிலையில் நீதிமன்றத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டு அவரை கைது செய்த போதே கைக்குண்டு அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

கே.400 இனத்தைச்சேர்ந்த கைக்குண்டெனவும் தெரிவித்த பொலிஸார் தடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 நன்றி அனுப்புனர்:-
ABDUL SALAM YASEEM - TRINCO

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW