மஹிந்த தரப்பின் புதிய கட்சி: பசில் ‘முதலாவது’ உறுப்பினர்!
மஹிந்த ராஜபக்ச தரப்பினர் நீண்ட நாட்களாக தெரிவித்து வரும் புதிய கட்சியாக ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன எனும் பெயர் மாற்றம் பெற்ற கட்சி உருவெடுத்துள்ளது.
இதன் முதலாவது உறுப்பினராக முன்னாள் அமைச்சரும், பல ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளவரும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்குக் காரணமானவரும் என தீவிர மஹிந்த ஆதரவாளர்களாலேயே விசனம் வெளியிடப்பட்ட பசில் ராஜபக்ச இணைந்துள்ளார்.
இன்றைய தினம் கூட்டு எதிர்க்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற அக்கட்சியின் முதலாவது செய்தியாளர் சந்திப்பில் வைத்தே பசில் ராஜபக்ச இணைந்து கொண்டதுடன் புதிய கட்சியில் மஹிந்த ராஜபக்சவும் இணைந்து கொள்வார் என அங்கு நம்பிக்கை வெளியிட்ப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.