பிரதமரின் பாதுகாப்புக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி தன்னைத் தானே சுட்டு தற்கொலை முள்ளிநியூஸ்

பிரதமரின் பாதுகாப்புக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி தன்னைத் தானே சுட்டு தற்கொலை


பொலிஸ் உயரதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐதராபாத் நகருக்கு வந்துள்ள பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க நியமிக்கப்பட்ட பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதாராபாத் நகரில் நேற்றும் இன்றும் நடைபெற்றுவரும் அனைத்து மாநில பொலிஸ் ஐ.ஜி. மற்றும் டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு பணிக்காக தெலுங்கானா மாநில காவல்துறையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் பணியமர்த்தப்பட்டிருந்தார்.

தெலுங்கானா மாநிலம், ஆசிபாபாத் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவந்த ஸ்ரீதர், ஐதராபாத் நகருக்கு உட்பட்ட உப்பராப்பள்ளியில் இன்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

குடும்பப் பிரச்சனை காரணமாக இந்த விபரீத முடிவை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம் என கருதும் ராஜேந்திரா நகர் பொலிஸ், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW