குச்சவெளியில் யானைகள் அட்டகாசம் முள்ளிநியூஸ்

குச்சவெளியில் யானைகள் அட்டகாசம்



திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கும்புறுபிட்டி கிழக்கில் சுமார் 450 குடும்பங்கள் வாழ்ந்து வரும் இவர்கள் விவசாயத்தை வாழ்வாதார தொழிலாக செய்து வருகின்றனர் .அண்மைக்காலமாக யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதுடன் வாழ்விடங்களை அளித்து வருகின்றது .

இரவு நடுநிசியில் விவசாய்கனிகளுக்குள் புகுந்து அங்குள்ள பப்பாசி தெண்ணெய் மற்றும் உணவுப் பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும் அப்பகுதியிலுள்ள மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானைகளின் தாக்குதலினால் 10 பேருக்கும் அதிகமானவர்கள் மரணித்தும் 20ற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டும் உள்ளதாகவும் அரச அதிகாரிகள் தெரிந்திருந்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் குற்றம் சுமத்துகின்றனர்.

தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் விவசாயம்.மற்றும் வீட்டுத்தோட்டங்களை மேற்கொண்டு வரும் வேளை அதனை பாதுகாத்து கொள்ளவே முடியாத நிலை காணப்படுவதாகவும் யானைகளின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பதற்கு யானை மின் வேலிகளை அமைத்து தர வேண்டுமென அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
e77


நன்றி அனுப்புனர்:-
இஹ்ஸானா- பரீத் 
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW