சட்டவிரோத மதுபானம் - சுங்க அதிகாரி உட்பட இருவர் கைது
ஒருதொகை வௌிநாட்டு மதுபானத்தை சட்டவிரோதமாக கொண்டு சென்ற, சுங்க அதிகாரி உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நிதி அமைச்சின் சட்டவிரோத போதைப் பொருள் சுற்றிவளைப்புப் பிரிவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்கள் கொழும்பில் சுமார் நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு மதுபானங்களுடன் தனது நண்பருடன் இவர் பயணித்துக் கொண்டிருந்துள்ளார்.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட இருவரும், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு எதிர்வரும் வௌ்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, சந்தேகநபரான சுங்க அதிகாரிளை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சின் சட்டவிரோத போதைப் பொருள் சுற்றிவளைப்புப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.