கிளிநொச்சி சுண்டிக்குளத்தில் நூறு கிலோ கேரள கஞ்சா மீட்பு
கிளிநொச்சி சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் இன்று சுமாா் நூறு கிலோ வரையான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ஆறு மணியளவில் சுண்டிக்குளம் கடல் மார்க்கமாக கஞ்சா கொண்டுவரப்படுவதாக தா்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபா் மகேஸ் வெலிகண்ணவின் வழிகாட்டலில் தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம். சத்துருங்க தலைமையிலான விசேட பொலீஸ் குழு நடவடிக்கையில் ஈடுப்பட்டு 72 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனா்.
இன்று அதிகாலை சுண்டிக்குளம் கடற்கரை பகுதிக்கு பொலிஸ் குழுவினரை அவதானித்த கடத்தல்காரர்கள் படகில் கஞ்சாவை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனா். இதேவேளை இரண்டு நபா்கள் உந்துருளியில் சுமாா் முப்பது கிலோ வரையான கஞ்சா பொதியை எடுத்துக்கொண்டு தப்பிச்செல்ல முற்பட்ட போது கடற்படையினா் சுற்றி வளைத்த நிலையில் அவா்களும் கஞ்சா பொதியை எறிந்து விட்டு தப்பிச் சென்றுவிட்டனா்.
இதன் போது மீட்கப்பட்ட 30 கிலோ வரையான கஞ்சாவும், கடற்படையினரால் விசேட அதிரடிப்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இதேவேளை பொலிஸாரினால் மீட்கப்பட்ட 72 கிலோ கஞ்சாவுமாக சுமாா் 102 கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை தா்ரமபுரம் பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனா். விரைவில் சந்தேகநபா்களும் கைது செய்யப்படுவா் எனவும் பொலீஸாா் தெரிவித்துள்ளனா்.