இந்தக் கேள்விக்கு ஞானசார பதில் வழங்குவாரா? வாயைப் பொத்துவாரா
முஸ்லிம்களும் தமிழர்களும் இந்தியாவில் இருந்து வந்த கள்ளதோணிகள் என்று ஞான(ம்)சாரா தேரர் கூறியிருக்கிறார்.
இந்தியாவிலிருந்து வந்தால்… என்ன நாங்கள் இழிவானவர்களா?
கௌதம புத்தரும், பௌத்த மதமும் பிறந்த நாடு இந்தியா தானே? இரண்டும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தவை தானே?
இந்தியாவில் பிறந்த புத்தரையும்m இந்தியாவிலிருந்து வந்த புத்தரின் போதனைகளையும் மதமாக மதித்து பூஜிக்க முடியுமென்றால்,
இந்தியாவிலிருந்து வந்தவர்களை மனிதனாக மதிக்க முடியாதா என்ன ?
ஞானசாரா இந்த நியாமான கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றார்.
இந்தியாவிலிருந்து வந்தவை கேடுகெட்டவை என்று ஞானசார கூறுவாராராயின் புத்தரின் போதனைகள் பற்றி என்ன சொல்லப்போகின்றார்?