கண்டியில் பள்ளி வீதியின் பெயர்பலகையினை உடைத்து முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகள். முள்ளிநியூஸ்

கண்டியில் பள்ளி வீதியின் பெயர்பலகையினை உடைத்து முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகள்.


கண்டியில் 19.11.2016 இல் “பௌத்த மதத்தை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் பௌத்த அமைப்புகள் ஒன்றி‍ணைந்து இனவாதத்தனை தூண்டும் வகையிலான பேரணி ஒன்றினை நடாத்தியிருந்தனர்.

கெட்டம்பே மைதானத்தில் பி.ப. 2.30 மணியளவில் ஒன்றுகூடிய பௌத்த அமைப்பினர் அங்கிருந்து தளதா மாளிகை நோக்கி பேரணியாகச் செல்லும்போது கண்டி லைன் பள்ளி வீதியின் தொடக்கத்திலுள்ள பெயர்ப்பலகை சேதமாக்கியுள்ளனர்.

அத்துடன் பேரணியில் முஸ்லிம்களுக்கெதிராகவும் அரசாங்கத்திற்கெதிராகவுமான வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோகங்களை ஏந்தியிருந்ததுடன் இனவாதாக் கோஷங்களையம் எழுப்பியுள்ளனர்.

தளதா மாளிகையை அண்மித்த பகுதியை சென்றடைந்து அங்கு உரை நிகழ்த்தியுள்ளதுடன் பின்னர் மல்வத்தை மகாநாயக்க தேரரை சந்தித்து மகஜர் ஒன்றிணையும் கையளித்துள்ளனர்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW