அப்துர் ராசிக்கின் பிணை மனு நிராகரிப்பு! முள்ளிநியூஸ்

அப்துர் ராசிக்கின் பிணை மனு நிராகரிப்பு!



இனவாத தூண்டல் குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரின் நடவடிக்கையினால் மாளிகாவத்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பைச் சேர்ந்த அப்துர் ராசிக்கின் பிணை மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஏலவே 29ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை மனு நீதிபதி சந்தன கலனசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இரு தரப்பு சூடான வாதங்களின் மத்தியில் ராசிக்கின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளமையும் ஏற்கனவே இதே குற்றச்சாட்டில் கைதான டான் பிரியசாத் தரப்பினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவும் நிராகரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW