மஹிந்த அனுப்பிய ‘செயற்கைக் கோள்’ எங்கே? சபையில் கேள்வி! முள்ளிநியூஸ்

மஹிந்த அனுப்பிய ‘செயற்கைக் கோள்’ எங்கே? சபையில் கேள்வி!



மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அவரது இளைய புதல்வரின் மேற்பார்வையில் இலங்கையின் முதலாவது செயற்கைக் கோள் அனுப்பப் பட்டதாக பிரச்சாரப்படுத்தப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினம் பாராளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் நாலிந்த ஜயதிஸ்ஸ.


இதற்கு பதிலளித்த அமைச்சர் மலிக் சமரவிக்ரம, அப்படியொரு செயற்கைக் கோள் அனுப்பப் பட்டிருக்கும் என்ற நம்பிககையில்லையென பதிலளிக்கவே அப்படியானால் உரிமை கோரிய நிறுவனத்தின் நிர்வாகியை அழைத்து இது குறித்து வினவ வேண்டும், அல்லது அந்த செயற்கைக் கோளைத் தேடி இன்னொரு செயற்கைக் கோளை அனுப்ப வேண்டும் என நாலிந்த ஜயதிஸ்ஸ சபையில் தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் சட் (பிரைவேட்) லிமிட்டட் எனும் நிறுவனம் ரூ. 18 பில்லியன் செலவில், ரோஹித ராஜபக்சவின் மேற்பார்வையில் குறித்த செயற்கைக் கோள் (Supreme sat 1) அனுப்பப்பட்டதாகவும் சீனத்தயாரிப்பான அதன் மூலம் இலங்கையில் தொலைக்காட்சி சேவைகளை மெருகூட்டுவதற்கான செயற்பாடே அது எனவும் அக்கால கட்டத்தில் (2012) தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW