அமைச்சரவையில் மீண்டும் முஸ்லிம் அமைச்சர்களுக்கிடையில் ‘லடாய்’

இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஏட்டிக்குப் போட்டியான கட்சிகளின் அமைச்சர்கள் இருவருக்கிடையில் மீண்டும் பலத்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.
உலோக இறக்குமதி தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சரின் முன்மொழிவை மறுத்து மற்றையவர் பேச விளைந்ததன் பின்னணியில் இம்முரண்பாடு தோன்றியுள்ளது.
இந்நிலையில் நீர்க்கட்டணத்தை உயர்த்த முயல்வதற்கான காரணம் குறித்து விசனம் வெளியிடுகையில் மேலதிகமாக 3000 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டதன் விளைவையே மக்கள் முதுகில் சுமத்த முனைவதாக மற்றவர் அளித்த விளக்கத்தின் பின்னணியில் இருவருக்குமிடையில் இவ்வாறு வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.
இவ்விரு அமைச்சர்களும் அமைச்சரவையில் ஒருவரையொருவர் சாடிக்கொள்ளும் சம்பவம் இரண்டாவது தடவையாக நிகழ்ந்துள்ளமையும் இரு அமைச்சர்களுக்கிடையிலும் அரசியல் போட்டி வலுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.