பிரேசில்: உதைபந்தாட்ட வீரர்களுடன் சென்ற விமானம் வீழ்ந்து விபத்து முள்ளிநியூஸ்

பிரேசில்: உதைபந்தாட்ட வீரர்களுடன் சென்ற விமானம் வீழ்ந்து விபத்து


பிரேசிலின் முக்கிய உதைபந்தாட்டக் கழகமொன்றின் வீரர்களுடன் பொலிவியாவிலிருந்து கொலம்பியா சென்ற விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.



குறித்த விமானத்தில் உதைபந்தாட்ட வீரர்கள் உட்பட 81 பேர் பயணித்துள்ள நிலையில் இதுவரை வெளியான தகவல்களின் படி அறுவர் உயிர்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சாரக் கோளாறு ஏற்பட்டிருப்பதாக விமானத்திலிருந்து தகவல் அனுப்பப்பட்ட நிலையிலேயே குறித்த விமான விபத்து கொலம்பியாவின் மெடலின் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.



நாளைய தினம் தென்அமெரிக்காவின் பிரதான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியொன்றின் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளச் சென்ற Chapecoense அணியினரே விபத்துக்குள்ளான தனியார் விமானத்தில் பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW