ஓட்டமாவடி ஜப்பார் திடல் பள்ளிவாயலின் அவல நிலை சாட்டோ வை.எல்.மன்சூர்..!!வீடியோ
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை, கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம் ஆகிய நிருவாக பிரிவுகளுக்கு உட்பட்ட வாகனேரி கிராம சேவையாளர் பிரிவில் அடங்குவதும் முஸ்லிம்களினுடைய பாரம்பரிய விவசாய நிலப்பகுதியினை அண்டி காணப்படுகின்ற முஸ்லிம் குடியிருப்புக்களில் ஒன்றான ஜப்பார் திடல் பள்ளிவாயலின் அவல நிலைமையானது மிகவும் மனவேதனை அளிக்க கூடியவிடயமாக இருக்கின்றது.
குறித்த பள்ளிவாயலின் அவல நிலைமையினை கல்குடா ஓட்டமாவடி உலமா சபை மற்றும் இஸ்லாமிய அமைப்புக்கள், முஸ்லிம் விவசாய அமைப்புக்கள், கால் நடை வளர்ப்பாளர்களின் சங்கம், கல்குடா முஸ்லிம் சமூகம் என்பன கவனத்தில் எடுத்து குறித்த பள்ளிவாயலினை நாளாந்த தொழுகைகளை நடாத்தி அப்பிரதேசத்தில் விவசாய கால் நடை வளர்ப்பாளர்கள் ஒருங்கிணைந்து பள்ளிவாயலுக்கான நிருவாக கட்டமைப்பினை ஏற்படுத்தும் வகையில் பள்ளிவாயலினை புனரமைப்பு செய்வது காலத்தின் கட்டாயமாகும்.
மேலும் குறித்த பிரதேசங்களில் வேளான்மை செய்கைகளில் முஸ்லிம் விவசாயிகள் தங்களினுடைய விவசாய நிலங்களில் நிரந்தர குடியிருப்புக்களை அமைத்து குடியிருப்பாளர்களாக மாற வேண்டிய கட்டாய நிலையானது ஓட்டமாவடி பிரதேசத்தின் அண்டிய நிலப்பிரதேசங்களில் அதிகரித்து வருக்கின்ற சனத்தொகை பெருக்கம், குடி நீர் மற்றும் சுற்றாடல் மாசடைதல் என்பன போன்ற இன்னோரன்ன பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு ஒர் ஆரோக்கியமான சமூகமாக மாறுவதற்கு வழியமைக்கும் என்பது முக்கிய விடயமாகவும் காலத்தின் கட்டாய தேவையாகவும் இருக்கின்றது.
நன்றி அனுப்புனர்:-
இஹ்ஸானா- பரீத்