கிண்ணியா மணியரசங்குளம் கிராம சேவகர் பிரிவில் யானைகளின் வருகையை தடுப்பதற்கான மின்சார வேலிகளை அமைத்து தருமாறு பொது மக்கள் வேண்டுகோள்

திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மணியரசங்குளம் கிராம சேவகர் பிரிவில் யானைகளின் வருகையை தடுப்பதற்கான மின்சார வேலிகளை அமைத்து தருமாறு சம்மந்தப் பட்ட அதிகாரிகளிடம் பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அண்மைக்காலமாக யானைகள் இக்கிராமத்துக்குள் உட் புகுந்து பயிர்கள் மற்றும் வீடுகளை சேதத்துக்குட் படுத்தி வருகின்றன.
இப் பகுதி ஊடாக ஆயிலியடி, வான் எல, கந்தளாய்,முள்ளிப்பொத்தானை ஆகிய இடங்களுக்கு செல்வோர் மிக அவதானத்துடன் பிரயாணம் செய்யுமாறு இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இம் மக்கள் பீதியுடன் வாழ்ந்து வருவதுடன் இவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப் படுத்த வனஜீவராசிகள் அமைச்சர் , திருமலை மாவட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை அரசியல் தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ் வருடத்துக்குள் இரு உயிர்கள் இழந்த இம் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது நல்லாட்சி அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.
நன்றி அனுப்புனர்:-
இஹ்ஸானா- பரீத்