நினைத்தால் நாளையே கட்சி ஆரம்பிப்பேன்: மஹிந்த
தான் நினைத்தால் நாளை வேண்டுமானாலும் புதிய கட்சி ஆரம்பிக்க முடியும் என சூளுரைத்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
எனினும், தான் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினராகவே இருப்பதாகவும் இந்த நாட்டில் யாருக்கு வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கும் சுதந்திரம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜி.எல். பீரிஸ் தலைமையில் புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டமை குறித்து கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.