ஸ்ரீபாத; முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்ட பிரச்சாரம்: பிரதியமைச்சர்! முள்ளிநியூஸ்

ஸ்ரீபாத; முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்ட பிரச்சாரம்: பிரதியமைச்சர்!


சிங்கள வானொலியொன்றின் தகவலால் சர்ச்சைக்குள்ளான ஸ்ரீபாத விவகாரம் தொடர்பில் விளக்கமளித்துள்ள பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன அப்பகுதியில் எவ்விதமான சட்டவிரோத நிர்மாணமும் இடம்பெறவில்லையென தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு நடாத்தப்படும் இப்பிரச்சாரத்தின் மூலம் அங்கு பள்ளிவாசல் எழுப்பப் படுவதாகவும் ஹோட்டல் கட்டப்படுவதாகவும் பல்வேறு பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதனால் முஸ்லிம்களின் மனம் நோகடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பிரதியமைச்சர், ஸ்ரீபாத பிரதேச வனப்பகுதிக்கு எந்தப் பாதிப்பும் இடம்பெற அனுமதிக்கப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

எனினும், கடந்த அரசில் அமைச்சர் ஒருவர் அங்கு ஹோட்டல் ஒன்றை நிறுவ முயற்சி செய்ததாகவும் அதற்காகவே அங்கு உலங்கு வானூர்தி இறங்கு தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW