கடந்த அரசாங்கத்தின் எல்லை நிர்ணய அறிக்கையை எந்தவொரு கட்சியும் ஏற்றுக் கொள்ளவில்லை
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் ஒரு கட்சிக்காகவோ அல்லது ஒரு குழுவுக்காகவோ தான் வேலை செய்வதில்லை என மாகாண சபைகள் மற்றும் உளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மன்றத்தினருக்கும் அமைச்சருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,
அனைத்து தரப்பினரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை விரைவில் நடாத்தக்கோரி நிற்கின்றனர், இந்த நாட்களில் பாராளுமன்றத்திலும் அதிகமாக பேசப்படுகின்ற விடயமும் இதுதான்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் ஒரு கட்சிக்காகவோ அல்லது ஒரு குழுவுக்காகவோ என்னால் வேலை செய்ய முடியாது.
அமைச்சர் என்ற வகையில் நான் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். கட்சிக்கு எதிரானாலும் எல்லை நிர்ணயம் தொடர்பில் நான் தீர்மானங்களை எடுப்பேன்.
எந்த ஒரு கட்சியும், கடந்த அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த அரசாங்கத்தின் அறிக்கைக்கு அமைய தேர்தல் நடந்தால் பல பிரச்சசினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்.
நாளை எல்லை நிர்ணய அறிக்கை எனக்கு சமர்பிக்கப்பட்டாலும் நான் தேர்தலை நடாத்த நடவடிக்கைகளை உடனே முன்னெடுப்பேன்" என அமைச்சர் தெரிவித்துள்ளார்.